twitter
rss


Best wishes on the occussion of friendship day

நட்பு!
கடல் அலைகள் ஓய்ந்தாலும்
இயற்கை வளம் குன்றினாலும்
மெல்லிசை மறைந்தாலும்
அழியாதது நட்பு

நட்புக்கு மன்ம் தேவை
இனம் தேவையில்லை
நட்புக்கு குணம் தேவை
பணம் தேவையில்லை

ஒருவர்,
கண்ணீர் சிந்துவதும் நட்புக்காகப்
போற்றலைப் பெறுவது நட்புக்காக
நம் வாழ்க்கையே நட்புக்காக!!

நட்பு வேண்டும்



மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு,
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு,
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

புகழ் எதிர்பார்க்காதது நட்பு,
சுயநலம் தெரியாதது நட்பு,
தலைக்கனம் இல்லாதது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

குழந்தையில் விளையாடிட நட்பு,
இளமையில் குறும்புகள் செய்திட நட்பு,
முதுமையில் கலந்துரையாடிட நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உனக்கு உறவாக வாழ்வது நட்பு,
உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு,
உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உன்னை மனிதனாக்குவதும் நட்பு,
உன்னை உணரவைப்பதும் நட்பு,
உன்னை உயர்த்துவதும் நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு,
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு,
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு

உன் நண்பர்களை புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...

இலுப்பையூர்
அரவிந்தனின்
இனிய
நண்பர் தின
நல்வாழ்த்துக்கள்