தை திங்கள் வந்தது தமிழருக்கு பெருமை தந்தது
ஏர்பிடித்து உழுதிடும் உழவரின் உழைப்பை
உலகுக்கு உணர்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்
உழைப்பவரின் மனதினை உற்சாகப்படுத்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்
கலப்பையினால்தான் அகப்பையில் சோறு என்பதை சொல்ல
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்
பல விஞ்ஞானம் வந்தாலும் இந்த விவசாயின் வேர்வைக்கு
தனி மதிப்புள்ளதென்பதை தைரியதுடன் சொல்ல
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
ஆடு மாடுக்கும் மனதுள்ளதென்பதை அறிந்து
மாலை மரியாதை செய்ய
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
கன்னியர்களை கெளரவப்படுதி
கூட்டமாக கூட்டாஞ்சோறு பொங்கிட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
மஞ்சளும் கரும்புடன் மங்களமாய் இனித்திட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
இப்படி -தமிழினங்களை தரணியில் உயர்த்திட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் உழவர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும்
என் மனமார்ந்த தைதிங்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..
தமைப்பேசாத் தமிழினத்தார்
‘தை’க்கு அன்று அப்பெயரைத்
தந்ததென்ன காரணமோ?
விளைச்சலையும் அனுபவிக்கும்
வித்தை தெரியவில்லை;
வியர்வையினால் பிறருக்குச்
சொத்தைப் பெருக்கித்தாம்
சொத்தையாய்ப் போவோர்க்கும்
இத்தைதான் கிழிந்திருக்கும்
இதயத்தைக் கொஞ்சம்
தைத்துத் தருவதனால்
தையென்று சொன்னாரோ?
காதலியர் கொங்கைகளாய்க்
காளையர்கள் எண்ணிக்
கைகளால் தழுவுகையில்
தைக்கின்ற புண்ணே
தாம் விரும்பும் குங்குமமாய்
வைக்கின்ற பெண்கள்தாம்
வைத்தாரோ இப்பெயரை
அம்மான் மகனும், இனி
இத்தையில் மணம்புரிய
இனிய வழி பிறக்குமென்று
மெல்ல நெஞ்சைத் தைப்பதனால்
தத்தைத் தமிழிலிதைத்
தையென்று சொன்னாரோ?
மணவாளன் இதயத்தைத்
தையலார் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
தக்கபடி புத்தாடை
தையலர்கள் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
களிக்கின்ற சிறுவர்கள்
தைதையென ஆடுவதால்
தையென்று சொன்னாரோ?
சமயப் பிணக்குகளால்
வீதிக் கலவரத்தால்
வெறிபிடித்த கட்சிகளின்
மோதல்களால் தங்கள்
முகவரியை −ழந்துவரும்
ஆதித் தமிழர்
அனைவரையும் ஒன்றிணைத்து
அன்பாலே தைக்கின்ற
அந்நாளே தையென்போம்
இன்பநாள் காண்போம்
இணைந்து என
|