twitter
rss

என் இனிய நண்பர்களே,

என் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!
தழைத்தோங்கட்டும் நமது தமிழர் பண்பாடு!!!!!!!!!!!

பொங்கல்லோ பொங்கல் என்று சொல்லி துதி பாடிவோம்!!!!!!!!!!


ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, மூங்கில்போல் பரவி, முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்' என்று கூறி பெரியோர் நம்மை வாழ்த்துவதை அறிந்திருப்போம்.

இந்த வாழ்த்து மொழிக்கேற்ப தமிழர்கள் வாழ்வும், பண்பாடும் வாழ்நிலையும் தொன்றுதொட்டு தடையின்றி தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் கொண்டாட்டங்களில் குறிப்பிடத்தக்கது தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் புத்தாண்டு.

நெற்பயிர் வளர்ந்து, கதிராகி முதிர்ந்து அறுவடை செய்யப்பட்டுப் புது நெல்லாகி பத்தாயத்திற்கு வந்து சேர்ந்த அதனை குத்தி அரசியாக்கி, அந்த புது அரசியை, மஞ்ச‌ள் மாலையிட்ட புதுப் பானையிலிட்டு, வெல்லச் சுவை சேர்த்துப் பொங்கி, அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று குரலெழுப்‌பி தமிழன் கொண்டாடு்ம் தலையாய பண்டிகை பொங்கல்.

அந்த வகையில் அறுவடைத் திருநாளாகவும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. தவிர, விவசாயத்திற்கும், வீட்டிற்கும் அன்றாடம் பயன்படும் கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து, அவற்றை ஆதவனுக்குப் படைத்து, நாமும் உண்டு, வாயில்லா ஜீவன்களுக்கும் அளித்து மகிழும் திருநாளாகவும் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

வீட்டிற்கு வெளியே முற்றத்தில் அடுப்புக்கட்டிகளை வைத்து பனை ஓலைகளைக் கொண்டும், புதிய விறகுகளைக் கொண்டும் புத்தரிசியை புதுப்பானையில் இட்டு, சர்க்கரை அல்லது வெல்லம் உள்ளிட்டவற்றைக் கொண்டு பொங்கல் படைப்பதுதான் தமிழரின் பொதுவான வழமை.

வீட்டு வாசலில் பொங்கல் படைப்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே முற்றத்தை சுத்தப்படுத்தி, பெயிண்டு அல்லது சுண்ணாம்பு பூசி, காவி உள்ளிட்ட வண்ணங்களைக் கொண்டு அழகுபடுத்தி, பொங்கல் நாளன்று அதிகாலையில் சூரியனுக்கு படையலிடுவதே இப்பண்டிகையின் சிறப்பு.

பொங்கல் மட்டுமின்றி கரும்பு, கிழங்கு வகைகள், காய்கறிகள், மஞ்சள் குலை உள்ளிட்டவற்றையும் படைப்பதை இன்றளவும் பெரும்பாலான தென் மாவட்டங்களில் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்டவைதான் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் பொங்கல் கொண்டாட்டங்கள் எனலாம்.

?ui=2&view=att&th=12622b8db815fe70&attid=0.1&disp=attd&realattid=ii_12622b8db815fe70&zw
?ui=2&view=att&th=12622b889cf3e51e&attid=0.1&disp=attd&realattid=ii_12622b889cf3e51e&zw

?ui=2&view=att&th=12622b898ab482ea&attid=0.1&disp=attd&realattid=ii_12622b898ab482ea&zw?ui=2&view=att&th=12622b8ac1d36a68&attid=0.1&disp=attd&realattid=ii_12622b8ac1d36a68&zw



?ui=2&view=att&th=12622b8c5974d0a8&attid=0.1&disp=attd&realattid=ii_12622b8c5974d0a8&zw

?ui=2&view=att&th=12622b8d236be885&attid=0.1&disp=attd&realattid=ii_12622b8d236be885&zw

0 comments:

Post a Comment