என் இனிய நண்பர்களே,
என் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!
தழைத்தோங்கட்டும் நமது தமிழர் பண்பாடு!!!!!!!!!!!
பொங்கல்லோ பொங்கல் என்று சொல்லி துதி பாடிவோம்!!!!!!!!!!
ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, மூங்கில்போல் பரவி, முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்' என்று கூறி பெரியோர் நம்மை வாழ்த்துவதை அறிந்திருப்போம்.
இந்த வாழ்த்து மொழிக்கேற்ப தமிழர்கள் வாழ்வும், பண்பாடும் வாழ்நிலையும் தொன்றுதொட்டு தடையின்றி தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் கொண்டாட்டங்களில் குறிப்பிடத்தக்கது தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் புத்தாண்டு.
நெற்பயிர் வளர்ந்து, கதிராகி முதிர்ந்து அறுவடை செய்யப்பட்டுப் புது நெல்லாகி பத்தாயத்திற்கு வந்து சேர்ந்த அதனை குத்தி அரசியாக்கி, அந்த புது அரசியை, மஞ்சள் மாலையிட்ட புதுப் பானையிலிட்டு, வெல்லச் சுவை சேர்த்துப் பொங்கி, அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று குரலெழுப்பி தமிழன் கொண்டாடு்ம் தலையாய பண்டிகை பொங்கல்.
அந்த வகையில் அறுவடைத் திருநாளாகவும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. தவிர, விவசாயத்திற்கும், வீட்டிற்கும் அன்றாடம் பயன்படும் கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து, அவற்றை ஆதவனுக்குப் படைத்து, நாமும் உண்டு, வாயில்லா ஜீவன்களுக்கும் அளித்து மகிழும் திருநாளாகவும் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
வீட்டிற்கு வெளியே முற்றத்தில் அடுப்புக்கட்டிகளை வைத்து பனை ஓலைகளைக் கொண்டும், புதிய விறகுகளைக் கொண்டும் புத்தரிசியை புதுப்பானையில் இட்டு, சர்க்கரை அல்லது வெல்லம் உள்ளிட்டவற்றைக் கொண்டு பொங்கல் படைப்பதுதான் தமிழரின் பொதுவான வழமை.
வீட்டு வாசலில் பொங்கல் படைப்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே முற்றத்தை சுத்தப்படுத்தி, பெயிண்டு அல்லது சுண்ணாம்பு பூசி, காவி உள்ளிட்ட வண்ணங்களைக் கொண்டு அழகுபடுத்தி, பொங்கல் நாளன்று அதிகாலையில் சூரியனுக்கு படையலிடுவதே இப்பண்டிகையின் சிறப்பு.
பொங்கல் மட்டுமின்றி கரும்பு, கிழங்கு வகைகள், காய்கறிகள், மஞ்சள் குலை உள்ளிட்டவற்றையும் படைப்பதை இன்றளவும் பெரும்பாலான தென் மாவட்டங்களில் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்டவைதான் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் பொங்கல் கொண்டாட்டங்கள் எனலாம்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..
தமைப்பேசாத் தமிழினத்தார்
‘தை’க்கு அன்று அப்பெயரைத்
தந்ததென்ன காரணமோ?
விளைச்சலையும் அனுபவிக்கும்
வித்தை தெரியவில்லை;
வியர்வையினால் பிறருக்குச்
சொத்தைப் பெருக்கித்தாம்
சொத்தையாய்ப் போவோர்க்கும்
இத்தைதான் கிழிந்திருக்கும்
இதயத்தைக் கொஞ்சம்
தைத்துத் தருவதனால்
தையென்று சொன்னாரோ?
காதலியர் கொங்கைகளாய்க்
காளையர்கள் எண்ணிக்
கைகளால் தழுவுகையில்
தைக்கின்ற புண்ணே
தாம் விரும்பும் குங்குமமாய்
வைக்கின்ற பெண்கள்தாம்
வைத்தாரோ இப்பெயரை
அம்மான் மகனும், இனி
இத்தையில் மணம்புரிய
இனிய வழி பிறக்குமென்று
மெல்ல நெஞ்சைத் தைப்பதனால்
தத்தைத் தமிழிலிதைத்
தையென்று சொன்னாரோ?
மணவாளன் இதயத்தைத்
தையலார் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
தக்கபடி புத்தாடை
தையலர்கள் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
களிக்கின்ற சிறுவர்கள்
தைதையென ஆடுவதால்
தையென்று சொன்னாரோ?
சமயப் பிணக்குகளால்
வீதிக் கலவரத்தால்
வெறிபிடித்த கட்சிகளின்
மோதல்களால் தங்கள்
முகவரியை −ழந்துவரும்
ஆதித் தமிழர்
அனைவரையும் ஒன்றிணைத்து
அன்பாலே தைக்கின்ற
அந்நாளே தையென்போம்
இன்பநாள் காண்போம்
இணைந்து என
அனைவருக்கும்அரவிந்தனின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கேபினட் அமைச்சர்கள்:
1. மன்மோகன் சிங் - பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
2. பிரணாப் முகர்ஜி - நிதி
3. ப.சிதம்பரம் - உள்துறை.
4. எஸ்.எம். கிருஷ்ணா - வெளியுறவு.
5. மம்தா பானர்ஜி - ரயில்வே
6. ஏ.கே.ஆண்டனி - பாதுகாப்பு.
7. சரத்பவார் - விவசாயம்
8. வீர்பத்ரசிங் - எஃகுத் துறை.
9. விலாஸ்ராவ் தேஷ்முக் -கனரக தொழில் மற்றும் பொதுத்துறை.
10. குலாம் நபி ஆசாத் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
11. சுஷில் குமார் ஷிண்டே - மின்சாரம்
12. வீரப்ப மொய்லி - சட்டம் மற்றும் நீதித்துறை.
13. ஃபரூக் அப்துல்லா - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
14. ஜெய்ப்பால் ரெட்டி - நகர்புற வளர்ச்சி
15. கமல்நாத் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
16. வயலார் ரவி - வெளிநாடுவாழ் இந்தியர் நலன்
17. மீரா குமார் - நீர் வள ஆதாரம்
18. தயாநிதிமாறன்- ஜவுளி.
19. ஆ. ராசா - தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்.
20. முரளி தியோரா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
21. அம்பிகா சோனி - தகவல் ஒலிபரப்பு.
22. மல்லிகார்ஜூன கார்கே - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு.
23. கபில்சிபல் - மனிதவள மேம்பாடு.
24. பி.கே. ஹண்டிக் - சுரங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு.
25. ஆனந்த் சர்மா - வர்த்தகம், தொழில்துறை.
26. சி.பி. ஜோஷி - கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்.
27. குமாரி செல்ஜா - வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா.
28. சுபோத்காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்.
29. எம்.எஸ்.கில்- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு.
30. ஜி.கே.வாசன்- கப்பல் போக்குவரத்து.
31. பவன் கே. பன்சல் - நாடாளுமன்ற விவகாரம்.
32. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி மற்றும் அமலாக்கம்.
33. காந்திலால் பூரியா-பழங்குடியினர் நலன்.
34. மு.க. அழகிரி- ரசாயனம், உரம்.
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு):
1. பிரபுஃல் படேல் - சிவில் விமானப் போக்குவரத்து.
2. பிரிதிவிராஜ் சவுகான் - விஞ்ஞானம், தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், ராணுவ வீரர் நலன், மக்கள் குறை கேட்பு, ஓய்வூதியம், நாடாளுமன்ற விவகாரம்.
3. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல், திட்ட அமலாக்கம்.
4. சல்மான் குர்ஷித் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்.
5. தின்ஷா ஜே. படேல் - குறு, சிறு, நடுத்தர தொழில் துறை.
6. கிருஷ்ண தீரத் - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு.
7. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல், வனம்.
இணை அமைச்சர்கள்:
1. ஸ்ரீகாந்த் ஜெனா - ரசாயனம், உரம்.
2. ஈ. அகமது - ரயில்வே.
3. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் - உள்துறை.
4. வி.நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்.
5. ஜோதிர் ஆதித்ய சிந்தியா - வர்த்தகம், தொழில்துறை.
6. டி. புரந்தேஸ்வரி- மனிதவள மேம்பாடு.
7. கே.எச்.முனியப்பா- ரயில்வே.
8. அஜய் மக்கான்- உள்துறை.
9. பனபகா லட்சுமி- ஜவுளி.
10. நமோ நாராயண் மீனா- நிதித்துறை.
11. எம்.எம்.பல்லம் ராஜூ - பாதுகாப்பு.
12. சவுகதா ராய் - நகர்புற வளர்ச்சி.
13. எஸ்.எஸ். பழனிமாணிக்கம்- நிதி.
14. ஜிதின் பிரசாதா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
15. ஏ.சாய் பிரதாப்- எஃகு
16. பிரனீத் கவுர்- வெளியுறவு.
17. குருதாஸ் காமத் - தொலை தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்.
18. ஹரீஷ் ராவத் - தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு.
19. கே.வி. தாமஸ் - விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது வினியோகம்.
20. பரத் சிங் சோலங்கி - எரிசக்தி
21. மகாதேவ் எஸ்.கந்தேலால்- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
22. தினேஷ் திரிவேதி - சுகாதாரம், குடும்ப நலன்.
23. சிசிர் அதிகாரி - கிராமப்புற மேம்பாடு.
24. சுல்தான் அகமது- சுற்றுலா.
25. முகுல் ராய் - கப்பல் போக்குவரத்து.
26. மோகன் ஜதுவா- தகவல் ஒலிபரப்பு.
27. டி.நெப்போலியன் - சமூகநீதி, அமலாக்கம்.
28. எஸ்.ஜெகத்ரட்சகன் - தகவல் ஒலிபரப்பு.
29. காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலன்.
30. துஷார் பாய் செளத்ரி - பழங்குடியினர் நலன்.
31. சச்சின் பைலட் - தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்.
32. அருண்யாதவ் - இளைஞர் நலன், விளையாட்டு.
33. பிரதீக் பிரகாஷ்பாபு பாட்டீல் - கனரக தொழில் துறை, பொதுத்துறை.
34. ஆர்.பி.என்.சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.
35. சசிதரூர் - வெளியுறவு.
36. வின்சென்ட் பலா - நீர்வளம்.
37. பிரதீப் ஜெயின் - கிராமப்புற மேம்பாடு.
38. அகதா சங்மா - கிராமப்புற மேம்பாடு.
திங்கள், 23 பிப்ரவரி 2009 81வது ஆஸ்கார்விருது விழாவில் விருதுபெற்றவர்கள்பற்றிய முழு விவரம்:
சிறிந்த திரைப்படம்:ஸ்லம்டாக் மில்லியனர்
சிறந்த நடிகர்: சீன் பென்(மில்க்)
சிறந்த நடிகை: கேத் வின்ஸ்லெட்(தி ரீடர்)
சிறந்த இயக்குனர்: டேனி போயல்(ஸ்லம்டாக் மில்லியனர்)
சிறந்த பிறமொழித் படம்:டிபார்ச்சர்ஸ்
(இயக்கியவர்யோகிரோ டகிடா- ஜப்பான்)
சிறந்த பாடல்: ஜெய் ஹோ -ஸ்லம்டாக் மில்லியனர் (இசை:ஏ.ஆர்.ரஹ்மான்)
சிறந்த இசையமைப்பாளர்:ஏ.ஆர்.ரஹ்மான் (ஸ்லம்டாக்மில்லியனர்)
சிறந்த படத்தொகுப்பு: க்ரிஸ்டிக்கென்ஸ் (ஸ்லம்டாக்மில்லியனர்) சிறந்த ஒலிக்கலவை: ரெசுல்பூக்குட்டி, இயான் தாப்,ரிச்சர்ட் ரைகி(ஸ்லம்டாக் மில்லியனர்)
சிறந்த ஒலித் தொகுப்பு:ரிச்சர்ட் கிங் (தி டார்க்நைட்)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்:எரிக் பார்பா, ஸ்டீவ் ப்ரீக்,
பர்ட் டால்டன்,க்ரெய்க் பார்ரன்
(திக்யூரியஸ் கேஸ் ஆஃப்பெஞ்சமின் பட்டன்)
சிறந்த ஆவணப்படம் (ஷார்ட்):மேகன் மைலன் (ஸ்மைல் பின்கி) சிறந்த ஆவணப்படம் (ஃபூச்சர்):ஜேம்ஸ் மார்ஷ், சைமன் சின்
(மென் ஆன் வயர்)
சிறந்த துணை நடிகர்: ஹீத்லெட்ஜர் (தி டார்க் நைட்)
சிறந்த துணை நடிகை: பெனால்ஃப்க்ரூஸ்
(விக்கி கிறிஸ்டினாபார்ஸிலோனா)
சிறந்த குறும்படம்: ஜோசென்அலெக்சாண்டர் (டாய்லேண்ட்)
சிறந்த ஒளிப்பதிவு: ஆண்டனிமேன்டில் (ஸ்லம்டாக்மில்லியனர்) சிறந்த ஒப்பனை: கிரெக் கேன்னம்
(தி க்யூரியஸ் கேஸ் ஆஃப்பெஞ்சமின் பட்டன்)
சிறந்த உடை வடிவமைப்பு:மைக்கேல் ஓக்கானர் (தி டச்சஸ்) சிறந்த கலை வடிவமைப்பு:டொனால்ட் க்ரஹாம், விக்டோர்ஜே.சோல்ஃபோ
(திக்யூரியஸ் கேஸ் ஆஃப்பெஞ்சமின் பட்டன்)
சிறந்த அனிமேட்டட்குறும்படம்: குனியோ கடோ
(லாமேய்ஸன் என் பெடிட்ஸ்க்யூப்ஸ்)
சிறந்த அனிமேட்டட்திரைப்படம்: ஆண்ட்ரூஸ்டான்டன் (வால்-ஈ) சிறந்த உண்மைத் திரைக்கதை:டஸ்டின் லான்ஸ் ப்ளாக் (மில்க்) சிறந்த திரைக்கதை (தழுவல்):சைமன் பஃபாய் (ஸ்லம்டாக்மில்லியனர்)