பொங்கல் நல்வாழ்த்துக்கள் | | |
தை திங்கள் வந்தது தமிழருக்கு பெருமை தந்தது
ஏர்பிடித்து உழுதிடும் உழவரின் உழைப்பை
உலகுக்கு உணர்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்
உழைப்பவரின் மனதினை உற்சாகப்படுத்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்
கலப்பையினால்தான் அகப்பையில் சோறு என்பதை சொல்ல
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்
பல விஞ்ஞானம் வந்தாலும் இந்த விவசாயின் வேர்வைக்கு
தனி மதிப்புள்ளதென்பதை தைரியதுடன் சொல்ல
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
ஆடு மாடுக்கும் மனதுள்ளதென்பதை அறிந்து
மாலை மரியாதை செய்ய
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
கன்னியர்களை கெளரவப்படுதி
கூட்டமாக கூட்டாஞ்சோறு பொங்கிட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
மஞ்சளும் கரும்புடன் மங்களமாய் இனித்திட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
இப்படி -தமிழினங்களை தரணியில் உயர்த்திட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் உழவர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும்
இலுப்பையூர் அரவிந்தனின் மனமார்ந்த
தைதிங்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..-- 
வாழ்க வளமுடன்
D.Aravinthan,
M.Sc physics,
Second year,
Bharathidasan university,
Trichy-620024,
Tamil Nadu.
www.currentaffairsandexam.